நீட் தேர்வு - தற்குறித்தனமாக பேசும் எடப்பாடி பழனிசாமி : முரசொலி தாக்கு!
நீட் தேர்வை ஒழித்தே ஆக வேண்டும் என்பதில் தி.மு.க. அரசு உறுதியாக இருக்கிறது. 'நீட்' விலக்கு மசோதாவை நிறைவேற்றிஅனுப்பி இருக்கிறது அரசு. மக்கள் மன்றம் - சட்டமன்றம் - நாடாளுமன்றம் - நீதிமன்றம் ஆகிய அனைத்திலும் நீட் தேர்வுக்கு எதிரான தனது போராட்டத்தை தி.மு.க. அரசு செய்து வருகிறது. ஆனால் அ.தி.மு.க.வின் ‘நீட்' தேர்வு நாடகங்கள் நாட்டு மக்கள் அனைவரும் அறிந்ததுதான்.